ஸ்மார்ட்சிட்டி பணியால் நெல்லையப்பர் கோயிலுக்கு பாதிப்பு : இந்து முன்னணி அமைப்பினர் குற்றச்சாட்டு

Sep 13 2019 1:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக நெல்லை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்‍கைகளால், நெல்லையப்பர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு ஆபத்து உள்ளதாக, இந்து முன்னணி அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

நெல்லை டவுன் பகுதியில் உள்ள நேதாஜி போஸ் மார்க்‍கெட்டை இடித்து விட்டு, சுமார் 10 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனைக்‍ கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து நேற்று போராட்டம் நடத்தினர். இந்தநிலையில், வணிக வளாகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் அப்பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 10 அடி தூரத்தில் பல அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, புதிய வணிக வளாகத்திற்கு கீழ் தரை தளம் கட்ட உள்ளதால், நெல்லையப்பர் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்திற்கு பாதிப்பு உண்டாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோயிலுக்‍கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும், புதிய வணிக வளாகத்தை அங்கு கட்டக்‍கூடாது என்றும் இந்து முன்னணி அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00