நவராத்திரி பண்டிகையையொட்டி ஆலயங்களில் சிறப்பு வழிபாடு - வீடுகளில் கொலு வைத்து பெண்கள், குழந்தைகள் குதூகலம்

Oct 5 2019 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

நவராத்திரி பண்டிகையையொட்டி, ஆலயங்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

நவராத்திரி விழாவையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வீடுகளில் கொலு வைத்து பெண்கள் வழிபட்டு வருகின்றனர். பஞ்சமூர்த்தி புறப்பாடு, பஞ்ச பாண்டவர்கள், பஞ்ச சபை, பஞ்ச பூத ஸ்தலங்கள், அத்திவரதர் விஜயம் என பல்வேறு சிற்ப காட்சிகள் நவராத்திரி கொலுவை அலங்கரித்துள்ளன.

திண்டுக்‍கல்லில் வீடுகளில் கொலு வைத்து வழிபட்டு வரும் மக்‍கள், முப்பெரும் தேவியர்களின் சிலைகளை வைத்து ஆராதனை செய்து வருகின்றனர். உறவினர்களும், நண்பர்களும் பரஸ்பரம் கொலு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடல்களைப் பாடி வழிபட்டனர்.

புதுச்சேரி குயவர்பாளையம் புட்டலாயம்மன் ஆலயத்தில், 200 கிலோ காய்கள் மற்றும் 100 கிலோ பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்‍தர்களுக்‍கு காட்சியளித்தார். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00