கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு

Nov 2 2019 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் ஜந்தாம் படைவீடாகும். இங்கு கந்தசஷ்டி விழாவையொட்டி, இன்று 6ம் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மூலவருக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், திருநீறு, இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முருகப்பெருமான், சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்‍தர்களுக்‍கு காட்சியளித்தார். கோபம் தணிந்து, முருகப் பெருமான் இங்கு வள்ளி தெய்வானையுடன் வீற்றிருப்பதால், இத்திருத்தலத்தில் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறாது. இன்று மாலை வில்வம், மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா, உள்ளிட்ட பலவகை நறுமண மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலியும், நாளை, திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறவுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00