திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட்டம் - மகா தீப கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது

Dec 9 2019 2:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

கார்த்திகை தீபத்திருநாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில், மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்‍னி ஸ்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்குகிறது. இத்திருத்தலத்தில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் நிறைவு நாளான நாளை, அதிகாலை 4 மணிக்கு கோயில் முன்பாக பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு இரண்டாயிரத்து 668 அடி உயரமான மலையின் மீது, மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு, தீப கொப்பரைக்கு கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் இன்று நடைபெற்றன. பின்னர், 15-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள் இக்‍கொப்பரையை, தோளில் சுமந்து சென்றனர். 5 அடி உயரமும் 200 கிலோ எடையும் கொண்ட இக்‍கொப்பரையில், பக்‍தர்கள் வழங்கும் மூவாயிரத்து 500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00