நாகர்கோவிலில் மக்‍கள் அமைதியாக வாழ வேண்டி காவடி எடுத்த போலீசார் - அலங்கரிக்கப்பட்ட யானையுடன் வேளிமலை குமாரகோவிலுக்கு ஊர்வலம்

Dec 13 2019 6:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டில் குற்றங்கள் குறைந்து மக்‍கள் அமைதியாக வாழ வேண்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் போலீசார் காவடி கட்டி ஊர்வலம் சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திக் கீழ் இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையன்று இவ்வாறு ஊர்வலங்கள் நடைபெறுவது வழக்‍கம். அந்த வகையில், கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று தக்கலை காவல் நிலையத்தில் போலீசார் காவடி கட்டி அலங்கரிக்கப்பட்ட யானையுடன் வேளிமலை குமாரகோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

இதேபோன்று மழை பெய்து நீர் வளம் செழிக்க வேண்டி பொதுப்பணி துறை அதிகாரிகளும், ஊழியர்களும், தக்கலை பொதுப்பணித் துறை அலுவலகத்திலிருந்து இன்று காவடி பவனி சென்றனர். நெற்றிப்பட்டம் சூட்டிய யானை மீது பால்குடம் ஏந்தி முன் செல்ல, மேளதாளத்துடன் காவடி தூக்கி ஆடியபடி அதிகாரிகளும் போலீசாரும் பவனி சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00