கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவக ஊழியர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்காததற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம்

Jan 16 2022 1:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவக ஊழியர்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காததற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு தரப்பினருக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் வகையில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா உணவகங்களை மூடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இம்முயற்சியை திமுக அரசு கைவிட்டது. இந்நிலையில், கும்பகோணத்தில் உள்ள அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஊழியர்கள் தாங்களாகவே பணியில் இருந்து நின்றுவிடலாம் என்ற என்ணத்தை அரசு உருவாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேசமயம் அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் குறைவாக விநியோகம் செய்யப்படுவதால், தரமான உணவை தயாரிக்க முடியாமல் ஊழியர்கள் திணறி வருகின்றனர். இதேப் போன்று எரிவாயு சிலிண்டர்களும் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் முழு ஊரடங்கு நாளான இன்று காலை உணவை தயாரிக்க முடியாததால், உணவு சாப்பிட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதுபோன்ற செயல்களால் அம்மா உணவகங்களை நிரந்தரமாக மூடுவதற்கு திமுக அரசு மறைமுக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00