19 வயது உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி - இந்தியா, பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை - கோப்பையை தக்க வைக்குமா இளம் இந்தியா?

Feb 9 2020 3:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
19 வயது உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியாவும், பங்களாதேசும் இன்று மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி உலகக் கோப்பையை கைப்பற்றும் என்பதால், ரசிகர்களிடையே மிகுந்த ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

19 வயது உட்பட்‍டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் ​தொடர், தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இதே போல், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை தோற்கடித்த பங்களாதேஷ் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்நி‌லையில் இன்று, Potchefstroom நகரில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணியும், பங்களாதேஷ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்திய நேரப்படி, பிற்பகல் 1 முப்பது மணிக்கு இறுதிப் போட்டி தொடங்க உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை, தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால், சக்சேனா, கேப்டன் பிரியம் கார்க் உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, தங்களது முதல் உலகக் கோப்பை கனவை நினைவாக்கும் முனைப்பில், பங்களாதேஷ் அணி வீரர்கள் உள்ளனர். நடப்பு சாம்பியனான இந்திய அணி, கோப்பையை தக்கவைத்துக் கொள்ள போராடும் என்பதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரை இந்திய அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.​
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00