ஆஸ்திரேலிய காட்டுத்தீ பாதிப்புக்கு நிதி திரட்டும் போட்டி : 40 நிமிடங்கள் 'பேட்டிங்' பயிற்சி செய்த 'மாஸ்டர் பிளாஸ்டர்'

Feb 9 2020 11:28AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக, Bushfire bash என்ற பெயரில் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட உள்ளது. இதில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்களான ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலைமையில், இரண்டு அணிகள் மோத உள்ளன. ரிக்கி பாண்டிங் அணிக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் தெண்டுல்கர் பயிற்சியாளராக பணியாற்ற உள்ளார். இதையொட்டி, ஆஸ்திரேலியாவிற்கு சச்சின் தெண்டுலர் மற்றும் யுவராஜ் சிங் சென்றுள்ளனர்.

இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி, சிட்னியில் இன்று நடைபெற உள்ள நிலையில், போட்டியின் இடையே தனது ஒரே ஒரு ஓவரை எதிர்கொள்ள தயாரா என்று, சச்சின் தெண்டுல்கரிடம், ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி கேட்டார். இந்த சவாலை ஏற்றுக் கொள்வதாக, சச்சின் தெண்டுல்கர் பதிலளித்துள்ளார். இதற்கிடையே, வலைப்பயிற்சியில் 40 நிமி‌டங்கள் சச்சின் தெண்டுல்கர் ஈடுபட்டார். அவருடன், யுவராஜ் சிங்கும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00