வெளியானது 13-வது ஐ.பி.எல்., தொடரின் போட்டிகளுக்கான முழு அட்டவணை - மார்ச் 29-ம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதல்
Feb 16 2020 2:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
13-வது ஐ.பி.எல்., தொடரின் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் 29-ம் தேதி, மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில், சென்னை - மும்பை அணிகள் மோத உள்ளன.
ஐ.பி.எல்., எனப்படும், இந்தியன் பிரீமியர் லீக்கின், 13-வது தொடரின் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், மார்ச் மாதம் 29-ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியுடன், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி மோத உள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில், சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. லீக் சுற்றில் மொத்தம் 56 போட்டிகள் நடைபெற உள்ளதாக, ஐ.பி.எல்., நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடைசி லீக் சுற்று போட்டியில், பெங்களூரு - மும்பை அணிகள் மோத உள்ளன. மாலை 4 மணி, இரவு 8 மணி என்று போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.