ஐ.சி.சி., மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் - முதல் போட்டியில், நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா‌வை, 17 ரன்கள் வித்தியாசத்தில், வீழ்த்தியது இந்தியா

Feb 21 2020 7:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.சி.சி., மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா‌வை, 17 ரன்கள் வித்தியாசத்தில், இந்திய அணி வீழ்த்தியது.

ஆஸ்திரேலியாவில், ஏழாவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. சிட்னியில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் லேனிங், இந்திய அணியை பேட்டிங் செய்யும்படி அழைத்தார். இதன்படி, ஸ்மிருதி மந்தனா, வெர்மா ஆகியோர் இன்னிங்சை தொடங்கினர். மந்தனா 10 ரன்களிலும், வெர்மா 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் Harmanpreet Kaur 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பொறுப்புடன் விளையாடிய தீப்தி சர்மா, 46 பந்துகளில், 49 ரன்கள் எடுத்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 132 ரன்கள் எடுத்தது.

133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, Alyssa Healy அரைசதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் lanning உள்ளி‌ட்ட வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். 19 புள்ளி 5 ஓவர்களில், 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் ஆஸ்தி‍ரேலிய அணி இழந்து தோல்வியை தழுவியது. 4 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் பூனம் யாதவ், ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00