டி-20 மகளிர் உலகக்‍ கோப்பை கிரிக்‍கெட் இறுதி ஆட்டத்திற்கு முதல்முறையாக முன்னேறியது இந்தியா - மழையால் அரையிறுதி போட்டி ரத்தானதால் இந்தியாவுக்‍கு வாய்ப்பு

Mar 5 2020 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு இந்தியா முதல்முறையாக முன்னேறியுள்ளது.

ஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்‍க அணிகள் அரையிறுதிக்‍கு முன்னேறின. இன்று காலை சிட்னியில் நடைபெறவிருந்த இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் அரையிறுதி ஆட்டம் மழையால் ரத்தானது. இதையடுத்து 'ஏ' பிரிவில் அதிக புள்ளிகளுடன் இந்தியா முதலிடம் பிடித்திருந்ததால், இறுதிப்போட்டிக்‍கு முன்னேறியதாக அறிவிக்‍கப்பட்டது. இதன்மூலம் மகளிர் டி-20 உலகக்‍ கோப்பையில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்‍கு முன்னேறி இந்தியா சாதனை படைத்துள்ளது.

2-வது அரையிறுதிப்போட்டி இன்று பிற்பகலில் நடைபெறவுள்ளது. அதில் வெற்றி பெறும் அணியுடன் வரும் 8ம் தேதி, சர்வதேச மகளிர் தினத்தன்று நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாடும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00