ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 5-வது முறையாக சாம்பியன்

Mar 8 2020 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி, ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்‌பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் Meg Lanning பேட்டிங்கை‌ தேர்வு செய்தார். இதன்படி, தொ‌டக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய Alyssa Healy, Beth Mooney ஆகியோர், இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். அதிரடியாக வி‌‌ளையாடிய Alyssa Healy, 39 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் Meg Lanning 16 ரன்களிலும், Ashleigh Gardner 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் அபாரமாக விளையாடிய Beth Mooney 54 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து கடைசி வ‌ரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் எடுத்தது.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்கமே அதிர்ச்சியளிக்க காத்திருந்தது. இத்தொடரில் அசத்திய இளம் வீராங்கனை ஷபாலி வர்மா 2 ரன்களில் ஆ‌ட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். கேப்டன் ஹர்மன்பிரித் கவுர், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்ட வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தீப்தி சர்மா 33 ரன்களிலும், வேதா கிருஷ்ணமூர்த்தி 19 ரன்களிலும் ​​பெவிலியன் திரும்பினர். 19 புள்ளி 1 ஓவர்களில், 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி தோல்வியை தழுவியது. ஆட்ட நாயகியாக, Alyssa Healy, தொடர் நாயகியாக Beth Mooney தேர்வு செய்யப்பட்டனர். இந்த வெற்றியின் மூலம், ஐந்தாவது முறையாக, மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00