ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெங்களூரு அசத்தல்- 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது

Sep 22 2020 9:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி கேப்டன் வார்னர், முதலில் பெங்களூருவை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி, முதலில் பேட் செய்த அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியினர், 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்திருந்த நிலையில், கடைசி 5 ஓவர்களில் 45 ரன்கள் தேவை என்ற நிலையில், போட்டியில் ஆதிக்கம் செலுத்தினர்.

இருப்பினும், 16-வது ஓவரில், 2 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி, அடுத்த ஓவரிலும் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து, 18-வது ஓவரிலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதால், ஆட்டம் பெங்களூரு கட்டுப்பாட்டுக்கு வந்தது.

1 விக்கெட் மட்டுமே மீதமிருந்த நிலையில், கடைசி ஓவரை எதிர்கொண்ட ஹைதராபாத்தின் வெற்றிக்கு, 19 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. அந்த ஓவரின் 4-வது பந்தில், கடைசி விக்கெட்டாக சந்தீப் சர்மா ஆட்டமிழந்ததால், 153 ரன்களுக்கு ஹைதராபாத் அணி ஆட்டமிழந்தது. இதன்மூலம், பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00