ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மும்பையில் காலமானார்
Sep 24 2020 4:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 59. ஆஸ்திரேலிய முன்னாள் கிரிகெட் வீரர் டீன் ஜோன்ஸ் 52 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 164 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9 ஆயிரத்து 699 ரன்கள் குவித்துள்ளார். நடப்பு ஐ.பி.எல். போட்டி தொடரில் வருணனையாளராக பணியாற்றி வந்த அவர், இதற்காக மும்பையில் தங்கி இருந்தார். இந்நிலையில், இன்று மதியம் மாரடைப்பால் டீன் ஜோன்ஸ் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.