ஷர்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்‍கெட் போட்டி : சென்னை அணிக்‍கு எதிரான ஆட்டத்தில், மும்பை அணி 10 விக்‍கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

Oct 24 2020 10:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐபிஎல் கிரிக்‍கெட்டில், சென்னை அணிக்‍கு எதிரான ஆட்டத்தில், மும்பை அணி 10 விக்‍கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணி, கெய்க்வாட், டு ப்ளசிஸ், அம்பதி ராயுடு, ஜெகதீசன் ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். 3 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி பரிதாப நிலைக்‍கு தள்ளப்பட்டது. பின்னர் வந்த கேப்டன் தோனி, ஜடேஜா, ஆகியோரும் மும்பை பந்துவீச்சை சமாளிக்‍க முடியாமல் பெவிலியன் திரும்பினர். 30 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை பறிகொடுத்த நிலையில், சாம் கர்ரன் மட்டும் தனியாக போராடி, 47 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரைசதம் அடித்தார். பின்னர் சென்னை அணி, 20 ஓவர்களின் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய Trent Boult 4 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

115 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்‍க ஆட்டக்‍காரர்களான குயின்டான் டி காக் மற்றும் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி, அணியை வெற்றிப் பாதைக்‍கு அழைத்துச் சென்றனர். இறுதியில் 12.2 ஓவரில் 116 ரன்கள் எடுத்து, 10 விக்‍கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷன் 37 பந்தில் 6 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்களுடன் 68 ரன்களும், குயின்டான் டி-காக் 37 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00