ஆ‍ரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித்தின் அசத்தல் ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி - 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது

Nov 27 2020 7:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில், கேப்டன் ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் சதம் அடித்தனர். பிஞ்ச் 124 பந்துகளில் 114 ரன்களும், ஸ்மித் 66 பந்துகளில் 105 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டேவிட் வார்னர் அரைசதம் அடித்து ஆட்டமிழக்க, 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இமாலய இலக்கை துரத்திய இந்திய அணியில், மயாங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், கேப்டன் கோலி ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பின்னர் களமிறங்கிய ஹார்திக் பாண்ட்யா, தொடக்க ஆட்டக்காரர் தவானுடன் சேர்ந்து ஆஸ்திரேலிய பந்து வீச்சை சிதறடித்தார். தவான் 74 ரன்களில் ஆட்டமிழக்க, 90 ரன்களில் பாண்ட்யா ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. ஆ‌ட்டநாயகனாக ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00