ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்த தமிழக வீரர் நடராஜன் : பல்வேறு தரப்பினரும் பாராட்டு

Dec 3 2020 10:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது ஒருநாள் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் எடுத்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர் நடராஜனுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டி நடராஜன் அறிமுகம் ஆனார். முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட் வீழ்த்தினார். கடைசி நேரத்தில் சிறப்பான யார்க்கர் பந்து வீச்சால் கடைசி நேரத்தில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை வெற்றியுடன் துவக்கி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கிரிக்கெட் வீரர் திரு.நடராஜன் அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு நம் பாரத தேசத்திற்காக மென்மேலும் பல சாதனைகளை படைத்து, நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்க்க மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00