இதய பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி - மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்
Jan 7 2021 1:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இதய பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த சவுரவ் கங்குலி, இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கடந்த 2-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மற்றும் ஸ்டென்ட் வைக்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. இந்நிலையில், சவுரவ் கங்குலி இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஸ் செய்யப்பட்டார். செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் நலமுடன் உள்ளதாகவும், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.