முதல் இன்னிங்சில் 244 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட் - 3ம் நாள் முடிவி ஆஸி. அணி 103 ரன்கள் சேர்ப்பு

Jan 9 2021 3:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிட்னியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 103 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று, ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. இறுதியில் 244 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்‍கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக புஜாரா 50 ரன்கள் எடுத்தார். ரிஷப் பண்ட் 36 ரன்களும், ஜடேஜா 28 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 94 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி தனது 2-ம் இன்னிங்கிஸை தொடங்கியது. வார்னர் மற்றும் வில் புகோவ்ஸ்கி ஆகியோர் முறையே 13 மற்றும் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் இணைந்த ஸ்டீவ் ஸ்மித், லபுஸ்சேன் ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் சேர்ந்து இந்தியாவை விட 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00