செங்கல்பட்டில் காவல்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது
Jan 9 2021 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டில் காவல்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. 4 கிலோமீட்டர் தூர மினி மாரத்தான் போட்டியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில், போலீசார், இளைஞர்கள், தன்னார்வலர்கள் என 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு-திருப்போரூர் கூட்ரோடு சாலையில் தொடங்கிய மாரத்தான், ஆஞ்சநேயர் கோயில் அருகே நிறைவடைந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை, காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.