5 கிலோ மீட்டர் தூரத்தை அரை மணிநேரத்தில் ஓடிக்கடந்த சிறுவர்கள் - பாராட்டை பெற்றது தூத்துக்குடி சிறுவர்களின் கின்னஸ் சாதனை முயற்சி
Jan 10 2021 12:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் 5 கிலோ மீட்டர் தொலைவை அரை மணிநேரத்தில் கடந்து கின்னஸ் சாதனை முயற்சியை வெற்றிகரமாக தொடங்கியுள்ளனர். 4 வயதே ஆன ஸ்ரீவர்ஷன் மற்றும் 5 வயது பிரவீன் கிருஷ்ணா ஆகிய இருவரும், கின்னஸ் சாதனைக்காக வரும் 26ம் தேதி 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓட திட்டமிட்டுள்ளனர். இதற்கான முன்னோட்டமாக நேற்று 5 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 35 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தனர். இதற்காக இச்சிறுவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.