ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணிக்கு வீரர்களின் காயத்தால் பெரும் சோதனை - ஜடேஜா, விஹாரி, பும்ரா விலகியதால் அணிக்கு நெருக்கடி

Jan 12 2021 10:19AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவுக்‍கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், காயம் காரணமாக ஜடேஜா, விஹாரி பும்ரா விலகியுள்ளதால், இந்திய அணிக்‍கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. சிட்னி டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இவ்விரு அணிகளுக்‍கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில், வரும் 15-ந்தேதி தொடங்க உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி, டெஸ்ட் தொடரை தன்வசப்படுத்தும்.

இந்நிலையில், காயம் காரணமாக 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளார். ஏற்கெனவே ஜடேஜா, விஹாரி ஆகியோர் காயம் காரணமாக விலகிய நிலையில், தற்போது பும்ராவும் விலகியிருப்பது இந்திய அணிக்‍கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், பிரிஸ்பேன் மைதானம் ஆஸ்திரேலியாவுக்கு ராசியானதோடு, தங்கள் அணிக்‍கு வெற்றி வாய்ப்பு கூடுதலாக உள்ளது என கூறினார். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏதும் இல்லாததால், வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00