ஐ.பி.எல்லில் ராஜஸ்தானுக்‍கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி - மற்றொரு போட்டியில் கொல்கத்தாவை வென்றது டெல்லி

Apr 30 2021 10:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.பி.எல். கிரிக்‍கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 2 லீக்‍ ஆட்டங்களில், மும்பை, கொல்கத்தா அணிகள் வெற்றி பெற்றன.

டெல்லியில் நடைபெற்ற 24-வது லீக்‍ போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்‍க ஆட்டக்‍காரர்களான Jos Butler 41 ரன்னிலும், Yashasvi Jaiswal 32 ரன்னிலும் ஆட்டமிழந்து வலுவான துவக்‍கத்தை அளித்தனர். பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஜோடி நிலைத்து நின்று விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சஞ்சு சாம்சன் 42 ரன்களிலும், ஷிவம் துபே 35 ரன்களிலும் பெவிலியன் திரும்ப, 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்‍கெட்டுகளை இழந்து 171 ரன்களை எடுத்தது. மும்பை அணியின் ராகுல் சஹார் அதிகபட்சமாக 2 விக்‍கெட்டுகளை வீழ்த்தினார்.

172 ரன்கள் என்ற கடின இலக்‍குடன் களமிறங்கிய மும்பை அணிக்‍கு, ரோஹித் சர்மா, சூர்யகுமார் சொற்ப ரன்களில் வெளியேறியதால், அந்த அணியின் ரசிகர்களுக்‍கு ஏமாற்றம் அளித்தது. தொடக்‍க ஆட்டக்‍காரரான Quinton de Kock தனது அதிரடி ஆட்டம் மூலம் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த Krunal Pandya, தனது பங்கிற்கு 39 ரன்களை எடுத்து வெளியேறினார். அரை சதத்தைக்‍ கடந்த Kock, கடைசி வரை அவுட் ஆகாமல் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மும்பை அணி 18 புள்ளி 3 ஓவரின் முடிவில் வெற்றி இலக்‍கான 172 ரன்களை அடைந்தது. இதன் மூலம் 7 விக்‍கெட் வித்தியாத்தில் அந்த அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி சார்பில் Chris Morris அதிகபட்சமாக 2 விக்‍கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 4-ம் இடத்தை தக்க வைத்தது.

இதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் நடைபெற்ற 25-வது லீக்‍ ஆட்டத்தில் டெல்லி - கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்‍கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்தது. அந்த அணியில், Andrew Russel 45 ரன்களும், சுப்மான் கில் 43 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். டெல்லி அணியின் சார்பில் அக்‍சர் பட்டேல், லலித் யாதவ் தலா 2 விக்‍கெட்டுகளை வீழ்த்தினர்.

155 ரன்கள் என்ற இலக்‍குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்‍க ஆட்டக்‍காரரான பிரித்வி ஷா, கொல்கத்தா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறிடித்தார். 41 பந்துகளை சந்தித்த அவர் 3 சிக்‍சர்கள், 11 பவுண்டரிகள் என 82 ரன்னில், கம்மின்ஸ் பந்தில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். மறுபுறம் ஷிகார் தவான் 47 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆகினார். இறுதியில் 17வது ஓவரின்போது, 3 விக்‍கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து, 7 விக்‍கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00