பெங்களூரு அணிக்‍கு எதிரான ஐபிஎல் கிரிக்‍கெட் போட்டியில் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி - கே.எல். ராகுல், கிறிஸ் கெயில் அபார ஆட்டம்

May 1 2021 10:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐபிஎல் கிரிக்‍கெட் தொடரில், பெங்களூ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அகமதாபாத்தில் நடைபெற்ற 26-வது லீக்‍ போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை ​தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்‍க வீரர் Prabh simran singh விக்‍கெட்டை இழந்தாலும், கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெய்லின் மின்னல் வேக ஆட்டம், அணியின் ஸ்கோரை விரைவாக உயர்த்தியது. 24 பந்துகளை சந்தித்த கிறிஸ் கெயில், 2 சிக்‍சர்கள், 6 பவுண்டரிகள் என 46 ரன்கள் எடுத்த நிலையில், Sams பந்தில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு வந்த நிக்‍கோலஸ் பூரண், Sharu Khan ஆகியோர் ரன் ஏதும் எடுக்‍காமல் வெளியேற, கடைசி வரை நிலைத்து நின்று ஆடிய கே.எல்.ராகுல், 5 சிக்‍சர், 7 பவுண்டரிகள் என 57 பந்தில் 91 ரன்கள் எடுத்து, பெங்களூரு அணிக்‍கு நெருக்‍கடியை ஏற்படுத்தினார். 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்‍கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்டியது. பெங்களூரு தரப்பில் Kyle Jamieson அதிகபட்சமாக 2 விக்‍கெட்டுகளை வீழ்த்தினார்.

180 ரன்கள் என்ற கடின இலக்‍குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, பஞ்சாப் பந்து வீச்சாளர்களை சமாளிக்‍க முடியாமல் திணறியது. கேப்டன் கோலி மற்றும் Rajat Patidar மட்டும் 30 ரன்களை கடந்த நிலையில் பெவிலியன் திரும்ப, படிக்‍கல், மேக்‍ஸ்வெல், AB de Villiers, Shabaz Ahmed, Daniel Sams ஆகியோர் ஒற்றை இலக்‍க ரன்களில் ஆட்டமிழந்து பெங்களூரு அணி ரசிகர்களை அதிர்ச்சிக்‍குள்ளாக்‍கினர். இறுதியில், 20 ஓவர்களுக்கு அந்த அணி 8 விக்‍கெட்டுகளை இழந்து 145 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய Hapreet Brar 3 விக்‍கெட்டுகளையும், Ravi Bishnoi 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

டெல்லியில் இன்றிரவு 7.30 மணிக்‍கு நடைபெறும் ஆட்டத்தில், சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர் திரு. ராமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00