ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி - நியூஸிலாந்துடன் மோதும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு
May 8 2021 10:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வாகி உள்ளன. இறுதி போட்டியானது ஜூன் 18-ம் தேதி முதல் ஜூன் 22-ம் தேதி வரை, இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்திருந்தது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட உள்ள வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், கேப்டன் விராட் கோலி, ரஹானே, ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, மயங்க் அகர்வால், விஹாரி, ரிஷப் பண்ட், ஜடேஜா, அக்சர் படேல், வாசிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சமி, சிராஜ், சர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். பேக் அப் வீரர்களாக கே.எல்.ராகுல், சகா இடம் பெற்றுள்ளனர். காத்திருப்பு வீரர்களாக அபிமன்யு ஈஸ்வரன், பிரசீத் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்சான் நாக்வஸ்வல்லா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.