லண்டன் ஓவல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தை ஆல் அவுட் செய்து இந்தியா வெற்றி பெறுமா? - பரபரப்பான கட்டத்தில் இன்றைய கடைசி நாள் ஆட்டம்

Sep 6 2021 10:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்துக்‍கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டியில், 368 ரன்களை வெற்றி இலக்‍காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன் எடுத்தது. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி, இந்திய வீரர்களின் அபார ஆட்டத்தால் 466 ரன்கள் குவித்தது. இதனால் இங்கிலாந்தைவிட 367 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றது. ரோகித் சதம் விளாசினார். புஜாரா, பண்ட், தாக்கூர் அரை சதமடித்து அசத்தினர்.

இதனைத் தொடர்ந்து, 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளது. ரோரி பர்ன்ஸ் 31 ரன்னும், ஹமீது 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 5-வது மற்றும் இறுதிநாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00