பிரேசில் அணிக்‍கு எதிரான உலகக்‍கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து - அர்ஜென்டினா வீரர்கள் கொரோனா விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகாரால் கைவிடப்பட்டது போட்டி

Sep 6 2021 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரேசில் அணிக்‍கு எதிரான உலகக்‍கோப்பை தகுதிச் சுற்றுக்‍கான கால்பந்து போட்டியில், அர்ஜெண்டினா வீரர்கள் கொரோனா விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தததை அடுத்து, போட்டி கைவிடப்பட்டது.

பிரேசிலின் சாவ் பாலோ நகரில், உலகக்‍கோப்பை தகுதிச் சுற்றுக்‍கான கால்பந்து போட்டியில், நெய்மர் தலைமையிலான பிரேசில் அணியும், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினாவும் மோதின. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, மைதானத்தில் நுழைந்த பிரேசில் நாட்டு சுகாதார அதிகாரிகள், கொரோனா விதிகளை மீறியதாக அர்ஜெண்டினா வீரர்களுடன் வாக்‍குவாதத்தில் ஈடுபட்டனர். அர்ஜெண்டினாவைச் சேர்ந்த 4 வீரர்கள், இங்கிலாந்தில் 14 நாட்கள் தங்கியிருந்து நேரடியாக ​போட்டியில் பங்கேற்க வந்ததாகவும், அப்போது அவர்கள் பொய்யான தகவல் அளித்து பிரேசிலுக்‍குள் நுழைந்ததாகவும் புகார் தெரிவிக்‍கப்பட்டது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்த அர்ஜெண்டினா கேப்டன் லைனல் மெஸ்ஸி, 3 நாட்கள் பிரேசிலில் தங்கியிருந்த நிலையில், போட்டி நடைபெறும்போது ஏன் இந்த குறுக்‍கீடு என கேள்வி எழுப்பினார். வாக்‍குவாதம் முற்றவே, இறுதியில் போட்டி ரத்து கைவிடப்பட்டதாக அறிவிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00