ஆப்கன் பெண்கள் கிரிக்‍கெட் அணிக்‍கு ஆதரவு அளிக்‍க வேண்டும் : தாலிபான்கள் மறுத்தால் ஆப்கன் ஆண்கள் அணியுடன் விளையாட மாட்டோம் என ஆஸ்திரேலியா கிரிக்‍கெட் வாரியம் திடீர் அறிவிப்பு

Sep 9 2021 2:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

அஃப்கானிஸ்தானில், அந்நாட்டு பெண்கள் கிரிக்‍கெட் அணிக்‍கு ஆதரவு அளிக்‍காவிட்டால், வரும் நவம்பரில் நடைபெறவுள்ள ஆப்கன் ஆண்கள் டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டியை நடத்தமாட்டோம் என ஆஸ்திரேலியா கிரிக்‍கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

தலிபான்கள் அஃப்கனிஸ்தானில் ஆட்சி அமைத்துள்ள நிலையில், அங்குள்ள பொதுமக்‍களின் நிலை கேள்விக்‍குறியாகி உள்ளது. உலகில் வேறெங்கும் இல்லாத கட்டுப்பாடுகள் பெண்களுக்‍கு விதிக்‍கப்பட்டுள்ளதால், அவர்களின் சுதந்திரம் அங்கு முழுவதுமாக பறிக்‍கப்பட்டுள்ளது. இந்த இக்‍கட்டான சூழலில், அஃப்கனிஸ்தான் ஆண்கள் அணி, வரும் நவம்பரில் ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்டு, அந்த அணிக்‍கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. அஃப்கனிஸ்தானில் நடைபெறும் அரசியல் பதற்றங்களுக்‍கு இடையே, அந்நாட்டு கிரிக்‍கெட் அணி பங்கேற்கும் பட்சத்தில், போட்டியை நடத்த தயாராக உள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்திருந்தது. இந்நிலையில், அஃப்கனிஸ்தான் பெண்கள் கிரிக்‍கெட் அணிக்‍கு, அந்நாடு ஆதரவு அளிக்‍காவிட்டால், ஆண்களுக்‍கான டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டியை நடத்தமாட்டோம் என ஆஸ்திரேலியா கிரிக்‍கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00