நியூயார்க்கில் நடைபெறும் U.S. Open டென்னிஸ் - கனடாவின் இளம் வீராங்கனை Leylah Fernandez முதல் முறையாக இறுதிப் போட்டிக்‍கு முன்னேற்றம்

Sep 10 2021 2:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

U.S. Open டென்னிஸ் போட்டியில், கனடாவின் இளம் வீராங்கனை Leylah Fernandez முதல் முறையாக இறுதிப் போட்டிக்‍கு முன்னேறியுள்ளார்.

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான U.S. Open டென்னிஸ் போட்டி, நியூயார்க் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில், தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள பெலராஸ் நாட்டு வீராங்கனை Aryna Sabalenka-வை, கனடாவின் இளம் வீராங்கனை Leylah Fernandez எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், முதல் செட்டை Fernandez-ம், 2-வது செட்டை Sabalenka-வும் கைப்பற்றியதால், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்‍கொண்டது. அனல் பறக்‍கும் ஆட்டத்தை வெளிப்படுத்திய Fernandez 6-4 என 3-வது செட்டை தன் வசப்படுத்தினார். இறுதியில், 7- 6, 4 -6, 6-4 என்ற செட்கணக்‍கில் வெற்றிபெற்று, முதல் முறையாக இறுதிப்போட்டிக்‍கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப் போட்டியில், பிரிட்டன் இளம் வீராங்கனை Emma Raducanu-வுடன் Leylah Fernandez பலப்பரீட்சை நடத்துகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00