விறுவிறுப்பாக நடைபெற்று வரும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் - இறுதிப் போட்டிக்‍கு முன்னேறினார் செர்பிய வீரர் ஜோகோவிச்

Sep 11 2021 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

U.S. Open டென்னிஸ் போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் Novak Djokovic இறுதிப் போட்டிக்‍கு முன்னேறியுள்ளார்.

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான U.S. Open டென்னிஸ் போட்டி, நியூயார்க் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில், 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும், உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளவருமான செர்பியாவின் Novak Djokovic, தரவரிசையில் 4-ம் நிலையில் உள்ள ஜெர்மனி வீரர் Alexander Zverev-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இரு வீரர்களும் அனல் பறக்‍கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி, மாறி மாறி செட்களை கைப்பற்றினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்‍கொண்டது. இறுதியில், 4-6, 6-2, 6-4, 4-6, 6-2 என்ற செட்கணக்‍கில் போராடி வெற்றிபெற்று, Djokovic இறுதிப் போட்டிக்‍கு முன்னேறினார்.

நாளை மறுநாள் நடைபெறும் இறுதியாட்டத்தில், தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் Daniil Medvedev-வுடன் Novak Djokovic பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00