நியூயார்க்கில் நடைபெற்ற யு.எஸ். ஓபன் டென்னிஸ் - மகளிர் பிரிவில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகேனு சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை

Sep 12 2021 10:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகேனு சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகேனு, கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டசை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே அதிரடியாக தொடங்கிய போட்டியில், முதல் செட்டை 6க்கு 4 என்ற கணக்கில் எம்மா ராடுகேனு கைப்பற்றினார். சுதாரித்துக் கொண்ட லேலா பெர்னாண்டஸ் தடுப்பாட்டம் மூலம் பதிலடி கொடுத்தார். எனினும் இரண்டாவது செட்டையும் 6க்கு 3 என்ற கணக்கில் எம்மா ராடுகேனு கைப்பற்றினார். ஒரு மணி நேரம் 51 நிமிடங்கள் நீடித்த போட்டியின் இறுதியில் எம்மா ராடுகானு, லேலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம், 1977-ம் ஆண்டுக்கு பிறகு யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் முதல் பிரிட்டன் வீராங்கனை, 44 ஆண்டுகளுக்கு பிறகு ஒற்றையர் பிரிவில் கிராண்ட்ஸாம் பட்டம் வெல்லும் முதல் பிரிட்டன் வீராங்கனை உள்ளிட்ட சாதனைகளை 18 வயதான எம்மா ராடுகேனு படைத்துள்ளார். யு.எஸ். ஓபன் பட்டம் வென்ற எம்மா ராடுகேனுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00