அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : ரஷ்ய வீரர் டெனில் மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார்

Sep 13 2021 7:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍க ஓபன் டென்னிஸ் போட்டியில், ரஷ்ய வீரர் டெனில் மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி, நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில், 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவரும், உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவருமான செர்பியாவின் ஜோகோவிச், தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் டெனில் மெட்வதேவ்-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்‍கம் முதலே அதிரடியாக விளையாடி ஜோகோவிச்சை, மெட்வதேவ் திணறடித்தார். இறுதியில் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்‍கில் வெற்றிபெற்று, மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதனால், கடந்த 2005ம் ஆண்டுக்கு பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யர் என்ற பெருமையை மெட்வதேவ் பெற்றுள்ளார். அதே சமயம், ஒரே வருடத்தில் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்று சரித்திர சாதனை படைப்பார் என எதிர்பார்க்‍கப்பட்டிருந்த நிலையில், மெட்வதேவ்வுடன் தோல்வியடைந்து ஜோகோவிச் ஏமாற்றம் அளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00