பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோற்றப் பிறகு இந்திய வீரர் முகமது ஷமி மீது வைக்கப்படும் மத ரீதியான விமர்சனங்கள் : ஷமிக்கு ராகுல் காந்தி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு

Oct 26 2021 7:04AM
எழுத்தின் அளவு: அ + அ -
முகம்மது ஷமியை மத ரீதியாக விமர்சனம் செய்த நிலையில் ஷமிக்கு, ராகுல் காந்தி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில், டி20 உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் இந்திய வீரர்கள் கடுமையாக திணறினர். பேட்டிங்கில் 150 ரன்கள் மட்டுமே இந்திய அணியால் எடுக்க முடிந்தது. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை. அதில், முகம்மது ஷமி 3.5 ஓவரில் 43 ரன்களை விட்டுக்கொடுத்தார். இந்த போட்டியில் இந்தியாவின் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத இந்திய ரசிகர்கள் முகம்மது சமியை அருவருக்கத் தக்க வகையில் விமர்சிக்கத் தொடங்கினர். அவர் இஸ்லாமியர் என்பதால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டுவிட்டார் என்பது போலவும், அவர் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டும் என்பது போலவும் அருவருக்கத் தக்க வகையில் விமர்சனத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், முகம்மது ஷமி நாங்கள் எல்லோரும் உங்களுடன் இருக்கிறோம். இவர்கள் அனைவரும் வெறுப்புத் தன்மையால் நிறைந்தவர்கள். ஏனென்றால் யாரும் அவர்களுக்கு அன்பைத் தரவில்லை. அவர்களை மன்னித்துவிடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். ஷமிக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் மற்றும் ஷேவாக் போன்றோரும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00