இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - கான்பூரில் இன்று தொடக்கம்

Nov 25 2021 10:38AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இருபது ஓவர் தொடரை பூஜ்ஜியத்துக்கு மூன்று என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகிய சூழலில், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் இடம்பிடித்துள்ளார். அதேப் போன்று, ஸ்ரேயாஸ் ஐயரும் இப்போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார். மூத்த வீரர்களான கோலி, ரோகித் சர்மா இல்லாத சூழலில், கேப்டன் ரஹானே, ஜடேஜா, அஸ்வின் போன்ற சீனியர்களுடன் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. ஏற்கனவே இருபது ஓவரை தொடரை இழந்த நியூசிலாந்து அணி, டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முயற்சி மேற்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் தொடரை கைப்பற்றும் முயற்சியில் இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00