நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் : முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா அபாரம் - 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள்

Nov 25 2021 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூஸிலாந்து அணிக்‍கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 4 விக்‍கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.

கான்பூரில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்‍க ஆட்டகாரராக களமிறங்கிய மயாங்க்‍ அகர்வால் 13 ரன்களுடன் வெளியேற, மற்றொரு தொடக்‍க ஆட்டக்‍காரரான சுப்மான் கில் அரை சதம் அடித்து பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு வந்த புஜாரா 26 ரன்களுடனும், ரஹானே 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகினர். 145 ரன்களுக்‍கு 4 விக்‍கெட்டுகளை இழந்த இந்திய அணி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ரன் உயர்வை பெற்றது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்‍கெட்டுகளை இழந்து, இந்தியா 258 ரன்களை எடுத்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 75 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூஸிலாந்து தரப்பில் அதிரடியாக பந்து வீசிய Kyle Jamieson 3 விக்‍கெட்டுகளை வீழ்த்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00