இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் : நியூசிலாந்து பந்துவீச்சாளர்களிடம் சரிந்த இந்திய அணி வீரர்கள் - 6 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றம்

Nov 28 2021 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
கான்பூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்திய அணி 345 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நியூசிலாந்து அணி 296 ரன்களில் சுருண்டது. இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 68 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணி, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து 4 விக்கெட்களை விரைவில் இழந்தது. 41 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது. நியூசிலாந்தின் அபார பந்து வீச்சால் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 200 ரன்களை கடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00