ஆஸ்திரேலிய ஓபனின் டென்னிஸில் விளையாடும் ஜோகோவிச்சுக்கு விசா மறுக்கப்பட்ட நடவடிக்கை ரத்து - முறையீட்டை விசாரித்த நீதிமன்றம் உத்தரவு

Jan 10 2022 1:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில், உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்து ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்ட நிலையில், அந்நடவடிக்கைக்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உலகின் முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பன் நகரில் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்‍கு வந்தடைந்த ஜோகோவிச்சிடம் தடுப்பூசி விவகாரத்தை அந்நாட்டு அதிகாரிகள் எழுப்பினர். கோவிட் 19 பரவல் காரணமாக தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜோகோவிச் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான ஆவணங்கள் இல்லை எனக்‍கூறி, அவரது விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசு, ஜோகோவிச்சை உணவகம் ஒன்றில் தனிமைப்படுத்தியது. இந்நிலையில், விசா ரத்து தொடர்பாக ஜோகோவிச் சார்பில் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், விசாவை ரத்து செய்து ஆஸ்திரேலிய அரசு பிறப்பித்த உத்தரவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00