பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து வெளியிடப்பட்ட சர்ச்சை பதிவு - தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் நடிகர் சித்தார்த்

Jan 12 2022 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
சமூக வலைதளங்களில் வெளியான சர்ச்சை பதிவு தொடர்பாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம், நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ளார். தனது நகைச்சுவை சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பஞ்சாபில் பிரதமர் திரு. மோடிக்‍கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விமர்சித்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் கருத்துக்‍கு, பதில் ட்வீட் செய்த நடிகர் சித்தார்த்தின் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சித்தார்த் சாய்னா நேவாலிடம் மனம் திறந்து மன்னிப்பு கோரியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சில நாட்களுக்கு முன்பு தங்கள் ட்வீட் ஒன்றிற்கு தான் அளித்த rude joke-க்குக்‍காக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார். தனது ட்வீட் நகைச்சுவைக்காக மட்டுமே என்றும், உள்நோக்கம் கொண்டது அல்ல என்றும் கூறியுள்ளார். தான் எப்போதும் பெண்களை மதிப்பவன் எனக்‍ குறிப்பிட்டுள்ள சித்தார்த், ஒரு பெண்ணான தங்களைத் தாக்கும் நோக்கம் தனக்கு சிறிதும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். சாய்னா நேவால் எப்போதும் தனது சாம்பியனாக இருப்பார் என்றும் சித்தார்த் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00