தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி - 2-வது இன்னிங்சில் இந்திய அணி 70 ரன்கள் முன்னிலை

Jan 13 2022 7:28AM
எழுத்தின் அளவு: அ + அ -
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 70 ரன்கள் முன்னிலை பெற்று களத்தில் உள்ளது.

இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் 11-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 77.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி முதல் ஆட்ட நேர முடிவில் கேப்டன் ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்தது. நேற்று நடந்த 2-ம் நாள் ஆட்டத்தின் தொடக்கம் முதலே இருந்து தென் ஆப்பிரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 76.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் 7 ரன்களிலும், கே.எல்.ராகுல் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 17 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00