மெல்பர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - Rafael Nadal, Naomi Osaka ஆகிய முன்னணி வீரர்கள் 2ம் சுற்றுக்கு முன்னேற்றம்

Jan 18 2022 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரா் Rafael Nadal, நடப்புச் சாம்பியன் Naomi Osaka ஆகியோர், தங்களது முதல் சுற்றுகளில் வெற்றியை பதிவு செய்தனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில், போட்டித் தரவரிசையில் 6-ம் இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் Rafael Nadal, தனது முதல் சுற்றில், அமெரிக்காவின் Marcos Giron-ஐ, 6-1, 6-4, 6-2 என்ற செட்களில் தோற்கடித்தார். கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில், ஜோகோவிச்சிடம் தோல்வி கண்ட நடால் பங்கேற்றுள்ள முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டி இதுவாகும்.

மகளிர் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியனான ஜப்பானின் Naomi Osaka, உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் Ashleigh Barty ஆகியோர், 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

போட்டித் தரவரிசையில், 13-வது இடத்தில் இருக்கும் Osaka, 6-3, 6-3 என்ற நேர்செட்களில் கொலம்பியாவின் Camila Osorio-வை வென்றார்.

மற்றொரு முன்னணி வீராங்கனையான Ashleigh Barty, தனது முதல் சுற்றில் 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் மிக எளிதாக உக்ரைனின் Lesia Tsurenko-வை வென்றார்.

முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் சோஃபியா கெனின், முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00