இந்தியா - தென் ஆப்பிரிக்காவுக்கு இடையே நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் : 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி

Jan 20 2022 7:14AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. கேப்டன் பவுமா 110 ரன்களும், வான்டெர் துஸ்சென் 129 ரன்களும் எடுத்ததால், தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களை குவித்தது.

இதையடுத்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே நிதானத்தை கடைபிடித்த இந்திய பேட்ஸ்மேன்கள், மெல்ல மெல்ல ரன்களை குவித்து வந்தனர். கேப்டன் கே.எல்.ராகுல் 12 ரன்களில் வெளியேற, கோலி மற்றும் தவான் ரன்களை குவித்தனர். இந்திய அணிக்கு ஒருபுறம் ரன்கள் சேர்ந்தாலும், மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி, ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை நடக்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00