2022-ம் ஆண்டுக்‍கான டி-20 உலகக்‍கோப்பை கிரிக்‍கெட் தொடருக்‍கான அட்டவணை வெளியீடு - இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது

Jan 21 2022 7:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
2022-ம் ஆண்டுக்‍கான டி-20 உலகக்‍கோப்பை கிரிக்‍கெட் தொடர் அக்‍டோபர் 16-ம் தேதி தொடங்க உள்ளதாக ஐ.சி.சி. அட்டவணை வெளியிட்டுள்ளது. இந்தியா முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

2022-ம் ஆண்டு டி-20 உலகக்‍கோப்பை கிரிக்‍கெட் தொடருக்‍கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்‍கோப்பை கிரிக்‍கெட் தொடர், வரும் அக்‍டோபர் 16ம் தேதி தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 16 சர்வதேச அணிகள் பங்கேற்கும் தொடரில், மொத்தம் 45 போட்டிகள் நடைபெறவுள்ளன. அக்‍டோபர் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை "சூப்பர் 12"-க்‍கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அக்‍டோபர் 16-ம் தேதி நடைபெற இருக்‍கும் முதல் தகுதிச் சுற்று போட்டியில், இலங்கை அணி நமீபியாவை எதிர்கொள்கிறது. அக்‍டோபர் 22-ம் தேதி "சூப்பர் 12" பிரிவு ஆட்டங்கள் தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி நியூஸிலாந்துடன் மோதுகிறது. அதேபோல், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருக்‍கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்‍டோபர் 23-ம் தேதி நடைபெறுகிறது. இறுதிப்போட்டி நவம்பர் 23-ம் தேதி நடைபெறுவதாக ஐ.சி.சி. அட்டவணை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00