இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு 13 மணி நேரம் தொடர் நீச்சல் : 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமி சாதனை

Mar 21 2022 8:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

Author - V K Sasikala

மும்பை கடற்படை அதிகாரியின் 13 வயது மாற்றுத்திறனாளி மகள், இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடலில் 13 மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

மும்பை கடற்படை அதிகாரி மதன் ராய் என்பவரின் மகள் ஜியாராய், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பாதிப்புக்குள்ளானவர். மும்பை கடற்படை பள்ளியில் படிக்கிறார். இவர், 2021 பிப்ரவரியில் மும்பை கடலில் 36 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்தார். இவரது சாதனையை 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் திரு. மோடி பாராட்டினார். இந்நிலையில், முதன்முதலாக இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை 29 கிலோ மீட்டர் துாரத்தை, 13 மணி நேரத்தில் நீந்தி ஜியா ராய் அசத்தியுள்ளார். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வந்தடைந்த அவரை, டிஜிபி திரு. சைலேந்திர பாபு தலைமையில் ஏராளமானோர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். நீச்சலில் சாதனை படைத்த சிறுமி ஜியாராய்க்‍கு, நினைவு பரிசு வழங்கி, திரு. சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00