தனுஷ்கோடி - தலைமன்னாரை இணைக்கும் பாக் ஜலசந்தியை 10 மணி நேரத்திற்குள் நீந்தி நவி மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவர் அன்சுமான் சாதனை : பல்வேறு தரப்பினரும் பாராட்டு

Apr 20 2022 8:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - இலங்கைக்கு இடையே உள்ள தனுஷ்கோடி - தலைமன்னாரை இணைக்கும் பாக் ஜலசந்தியை 10 மணி நேரத்திற்குள் நீந்தி நவி மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவர் அன்சுமான் சாதனை படைத்தார்.

மகராஷ்டிரா மாநிலம் நவி மும்பையைச் சேர்ந்த சந்திப் ஜிங்க்ரான் - கிரன் தம்பதியினரின் மகன் அன்சுமான். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையிலுள்ள தலைமன்னாரிலுந்து தனுஷ்கோடிக்கு வரையிலும் உள்ள பாக் ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்திய வெளியுறவுதுறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சகத்திற்கு அனுமதி கோரியிருந்தார். இந்திய - இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில், அவரது தந்தை ஜிங்க்ரான், பயிற்சியாளர்கள் கோகுல் காமத் மற்றும் அமித் அவலே ஆகியோருடன் இலங்கைக்கு சென்றார். நேற்று அதி காலை தலைமன்னாரிலுந்து நீந்தத் தொடங்கிய அன்சுமான் பிற்பகல் 3 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை வந்தடைந்தார். இந்த சாதனையை தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பார்வையாளர் விஜய் குமார் உறுதிப்படுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00