ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் டெல்லிக்கு எதிரான ஆட்டம் : மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

May 22 2022 10:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் டெல்லி அணி களமிறங்கியது. போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. இறுதியில் மும்பை அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கான 160 ரன்களை எடுத்தது. இதன் மூலம் டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றிபெற்றது. மும்பைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் டெல்லி அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. டெல்லி தோல்வியடைந்ததால் 16 புள்ளிகள் பெற்றிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4-வது இடத்திற்கு முன்னேறியது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 4-வது அணியாக பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00