காமன்வெல்த் பளுதூக்‍குதலில் ஆண்கள் 67 கிலோ எடை பிரிவு போட்டி : மிசோரமைச் சேர்ந்த இளம் வீரர் ஜெரிமி லால்ரின்னுங்கா தங்கம் வென்று சாதனை

Aug 1 2022 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் ஆண்களுக்கான, 67 கிலோ பளுதூக்கும் பிரிவில் இந்திய வீரர் லால்ரினுங்கா ஜெரிமி தங்கம் வென்றுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் பல்வேறு பிரிவுகளில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக தங்களது பங்களிப்பை செய்து வருகின்றனர். ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் லால்ரினுங்கா ஜெரிமி தங்கம் வென்றுள்ளார். லால்ரினுங்கா ஸ்னாட்ச் பிரிவில் 140 கிலோ, க்ளீன் & ஜெர்க் பிரிவில் 160 கிலோ என மொத்தம் 300 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்துள்ளார். லால்ரினுங்காவுக்‍கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனிடையே, பெண்களுக்கான 70 கிலோ லைட் மிடில் வெயிட் குத்துச்சண்டைப் போட்டியில் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியாவின் 24 வயதான லவ்லினா நியூஸிலாந்தின் அரியானா நிக்கல்சனை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். லவ்லினா காலிறுதியில் வேல்ஸின் ரோஸி எக்லஸை எதிர்கொள்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00