காமன்வெல்த் போட்டி ஜூடோ பிரிவில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் : 9 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 6-வது இடத்தில் இந்தியா

Aug 2 2022 6:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் போட்டியில், இந்தியாவின் விஜய் குமார் யாதவ், ஜூடோ போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். இதனையடுத்து, காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது. 4-வது நாளான நேற்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். முன்னதாக நடைபெற்ற மகளிர் ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சுஷிலா தேவி வெற்றி பெற்று பதக்கத்தை உறுதி செய்தார். மொரீஷியஸின் பிரிசில்லாவை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி அவர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த நிலையில் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் மைக்கேலா வைட்பூவிடம் வீழ்ந்து சுசிலா தேவி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனை ஹர்ஜிந்தர் கெளர் பெண்களுக்கான 71 கிலோ எடை பிரிவில் வெண்கலப்பதக்‍கம் வென்றுள்ளார்.

ஒட்டுமொத்தமாக இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00