ஊக்‍க மருந்து விவகாரத்தில், தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி - சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 3 ஆண்டுகள் தடை விதிப்பு

Aug 3 2022 10:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊக்‍க மருந்து விவகாரத்தில், தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 3 ஆண்டுகள் தடை விதிக்‍கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தில் Birmingham-ல் கடந்த 28ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் தொடரில் 200 மீட்டர் தடகளம் மற்றும், ரிலே போட்டியில் தமிழக வீராங்கனை தனலட்சுமி பங்கேற்க இருந்தார். இந்நிலையில், காமன்வெல்த் தொடருக்கு முன்பாக அனைத்து நாடுகளின் வீரர் மற்றும் வீராங்கனைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழக வீராங்கனை தனலட்சுமி, தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது மருத்துவ சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து காமன்வெல்த் போட்டியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் தனது தவறை ஒப்புக்கொண்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட தடை 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி, தொடர்ந்து தேசிய அளவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஊக்‍க மருந்து புகாரில், மற்றொரு தமிழக தடகள வீரர் மகிமைராஜ் 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00