காமன்வெல்த் போட்டிகளில் அசத்தும் இந்திய வீரர், வீராங்கனைகள் - டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம் பிரிவுகளில் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு இந்தியா முன்னேற்றம்

Aug 5 2022 6:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் போட்டிகளில் அசத்தி வரும் இந்திய வீரர், வீராங்கனைகள், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம் உள்ளிட்ட பிரிவுகளில் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறியுள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டி தொடங்கிய முதல் நாள் முதலே அசத்தி வரும் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என இதுவரை 20 பதக்கங்களை குவித்துள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், இலங்கையைச் சேர்ந்த துமிந்து அபேவிக்ரமாவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டேபிள் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷரத் கமல்-ஸ்ரீஜா அகுலா இணை இரண்டாவது சுற்றில் மலேசியாவின் ஃபெங் சீ லியோங் மற்றும் யிங் ஹோ ஜோடியை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மணிகா பத்ரா மற்றும் ஸ்ரீஜா அகுலா ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்றில் இந்தியாவின் ஷரத் கமல் மற்றும் சத்யன் ஜோடி, வங்கதேசத்தின் ரஹ்மான் பாம், மொஹ்சின் அகமது ரிடோய் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர். பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை பவீனா பட்டேல் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று, பதக்கத்தை உறுதிச் செய்துள்ளார்.

மல்யுத்த போட்டிகளில், ஆண்களுக்கான ப்ரீஸ்டைல் 65 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியாவும், 86 கிலோஎடை பிரிவில் இந்தியாவின் தீபக் புனியாவும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதேப் போன்று பேட்மிண்டன், தடகளம் உள்பட பல்வேறு போட்டிகளிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00