காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி - ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த இந்திய மகளிர் அணிக்கு வெள்ளிப் பதக்கம்

Aug 8 2022 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்த இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷபாலி வர்மாவும், ஸ்மிர்தி மந்தனாவும் சிறப்பான தொடக்கத்தை கொடுக்க தவறினர். அடுத்து வந்த ஜெமினா - ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஆனால் அவர்களால் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்செல்ல முடியவில்லை. ஜெமினா 33 ரன்களும், ஹர்மன்பிரீத் கவுர் 63 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் அடுத்து வந்தவர்கள் நிலைத்து நின்று ஆடாமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இறுதியில் இந்திய அணி 19.3 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. தோல்வியடைந்த இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00